வெந்தயத்திற்கு சாதாரண கிராக்கி நீமச் :- நாட்டின் முக்கிய உற்பத்தி மாநிலத்தில் வரத்துக்கு ஏற்ப வெந்தயத் திற்கான தேவை குறைவால் விலையில் உயர்வு ஏற்பட வில்லை. வரப்போகும் தீபாவளி வரை இருப்பு வைப்பவர்கள் மற்றும் விவசாயி களின் சரக்கு சப்ளை நடைபெறலாம். விலையில் 50-100 ரூபாய் வரை குவின்டலுக்கு ஏற்ற -இறக்கம் நடை பெற்று வருகிறது. மத்திய அரசு நீமச் மண்டியில் சென்ற ஒரே வாரத்தில் 8-10 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 4200- 4500, நடுத்தரம் 5000-5200, நயம்5800-6000, ஜாவ்ராவில் 7-8 ஆயிரம் வரத்தில் ஆவரேஜ் 4500- 4600, நடுத்தரம் 4800-5300, நயம் 6500- 7000, நயம் பாப்டா 9000-9500, நடுத்தரம் 8000-8500, மன்சூரில் 3-4 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் 3260-5141 ரூபாய் வரை ரகவாரியாக வியாபார மாகியது. ராஜஸ்தான் மாநில ராம்கன்ஜ்மண்டி, கோட்டா, நோக்கா வட்டாரங்களில் சேர்ந்து வாரத்திர்கு 7-8 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 4200-4300, நடுத்தரம் 4500- 4800, நயம் 5800-6000, ராஜ் கோட்டில் வாரத்திற்கு 2-3 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 4150 -5050, 5050-6000, நயம் பலசரக்கு ரகம் 6050-6250 ரூபாயாகியது.
Updated On: June 29, 2025, 7:46 pmசீரக வாய்தாவில் உயர்வு இல்லை மும்பை :- வியாபாரிகளின் கணிப்புப்படி 2 வாரத்திற்கு முன்பு சீரகம் ஜூலை-ஆகஸ்ட் வாய்தா விற்பனையின் கொள்முதல் காரணமாக என்.சி.டி.ஈ. எக்சில் ஜூலை வாய்தா 18,850 ரூபாயில் ஆரம்பமான பிறகு வெள்ளி வரை 1245 உயர்ந்து 20,095, ஆகஸ்ட் வாய்தா 1145 உயர்ந்து 20,215 ரூபாயில் முடிவுபெற்றது. குஜராத்தில் மழைக்கால பருவம் காரணமாக விவசாயிகளின் விதைப்பில் மும்மரமாக இருப்பதால் மண்டியில் சரக்கு வரத்து குறைவான பிறகு வாய்தாவில் ரெடி விலையில் உயர்வு ஏற்படவில்லை. குஜராத்தின் ஊஜ்ஜாவில் சென்ற வாரம் 30-35 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 17,000-18,000, நடுத்தரம் 18,500- 19,000, நயம் 19,500-20,000 ரூபாயாகியது. ராஜ் கோட்டில் 3000-3500 மூட்டைகள் வரத்தில் ஆவரேஜ் 17,350-18,000, 18,000-18,500, យប់ 18,500 -19,000, ஐரோப்பா ரகம் 19,000-19,250, பலசரக்கு ரகம் 19,250-19,500, एक 17,000 -17,625, கோண்டலில் 17,000-18,500, ஜாம்நகரில் 400-500 மூட்டைகள் வரத்தில் 16,500-19,250 வரை ஆகியது.
Updated On: June 29, 2025, 7:45 pmஇந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு மும்பை :- வெளி நாட்டு மார்க்கெட்டில் கடுகு புண்ணாக்குக்கான தேவையில் குறைவு, உலக மார்க் கெட்டில் சோயா புண்ணாக்கு மிகவும் அதிக சப்ளையால் இந்தியாவிலிருந்து புண்ணாக்கு ஏற்றுமதி மீது தாக்கம் ஏற்பட்டது. இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசி யேஷன் கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை நாட்டில் புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 44,90,000 ஆக இருந்தது 12.39 சதம் குறைந்து 39,33,000 டன்களாகியது. இதில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2024 ல் 5,15,000 ஆக இருந்ததை விட 3,30,000 டன்கள் வரை குறைந்தது. மேலும் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை தேவையில் குறைவு காரணமாக இந்தியாவிலிருந்து கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 20,39,000 ஆக இருந்தது 17.53 சதம் குறைந்து 16,82,000 டன்களாகியது. மார்ச்,2024 ல் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 285 டாலர் டன்னாக இருந்தது. அது குறைந்து 270 டாலர் வரை எட்டியபிற/ 17,மார்ச்,2025 அன்று குறைந்து 190 டாலர் டன்னாகியது. ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி :- ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை இந்தியாவிலிருந்து ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 3,39,000 ஆக இருந்தது 21.44 சதம் குறைந்து 2,74,000 டன்களாகியது. டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் :- ஆகஸ்ட்,2023 முதல் ஏற்று மதிக்கு தடை காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் முக்கியமாக கிழக்கிந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் விலை ஓராண்டுக்கு முன்பு 13,500 ஆக இருந்ததை விட குறைந்து 8500 ரூபாய் வரை குவின்டலுக்கு ஆகியது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி :- நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஏற்றுமதி ஏறக்குறைய சென்ற ஆண்டுக்குச்சமானமாக உள்ளது.இதனிடையில் ஜெர்மனி, பிரான்சு நாட்டுக்கான தேவையால் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இதே சமயம் 19,34,000 ஆக இருந்தது 19,40,000 டன்களாகியது. ஆனால் நடப்பு எண்ணெய் ஆண்டில் அக்டோபர்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை உலக மார்க்கெட்டில் மிகவும் அதிக சப்ளையால் இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 13,47,000 ஆக இருந்தது குறைந்து 10,31,000 டன்களாகியது. ஏற்றுமதி விலையில் குறைவு ஏற்பட்டு 380 டாலராக இருந்ததை விட குறைந்து 360 டாலராகியது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி, 2025 ல் தென் கொரியா இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 7,87,000 ஆக இருந்தது குறைந்து 6,14,000 டன்களாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 3,94,000, ஆமணக்கு புண்ணாக்கு 1,66,000,, சோயா புண்ணாக்கு 54,156 டன்கள் வரை ஆகியது. வியட்நாம் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 3,94,000 ஆக இருந்தது குறைந்து 2,21,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 1,87,000, சோயா புண்ணாக்கு 22,208, டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் எக்ஸ்டிராக்ஷன் 11,283 டன்கள், கடலை புண்ணாக்கு 3003 டன்களும் இறக்குமதி செய்தது. தாய்லாந்து இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 6,04,000 ஆக இருந்தது 4,13,000 டன்கள் வரையும் செய்தது. இதில் கடுகு புண்ணாக்கு 3,88,000, சோயா புண்ணாக்கு 15,879, கடலை புண்ணாக்கு 8655 டன்களும், சீ கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஐரோப்பிய நாடு இந்திய சோயா புண்ணாக்கு இறக்குமதியை ஏறக்குறைய 5,95,000 டன்கள் வரை செய்தது. பங்ளாதேஷ் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 7,79,000 ஆக இருந்தது குறைந்து 6,98,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 5,51, 000, சோயா புண்ணாக்கு 1,38,000 டன்களும், கென்யா அக்டோபர்-பிப்ரவரியில் சோயா புண்ணாக்கு இறக்குமதி 1,49,000 டன்களாகியது.
Updated On: March 25, 2025, 6:38 am