Subscription Service

All Ads in Tamil

கிராக்கியால் சிவப்பு வத்தல் விலை உயர்வு

ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி வரப்போகும் பருவத்திற்கான விதைப்பில் குறைவு ஏற்படலாம் என்பதாலும், மசாலா அரவையாளரோடு வெளி மாநிலத்திற்கான கிராக்கி ஏற்பட்டதால் சென்ற வாரம் குண்டூரில் டீலக்ஸ் ரகத்தோடு அனைத்து நடுத்தரம், நடுத்தர நயம், சண்டு போன்ற அனைத்து ரகத்தின் விலையிலும் 300-500 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. இதனால் சரக்கு ரகவாரியாக வியாபார மாகியது. கிடைத்த செய்திகளின்படி குண்டூர் ஏசி கிட்டங்கியில் இதுவரை கணித்தபடி 42-43 லட்சம் மூட்டைகள் சிவப்பு வத்தல் இருப்பு உள்ளது. இதில் நயம் ரகச்சரக்கு குறைவாக உள்ளது. குண்டூர் மண்டி யார்டில் சென்ற வாரம் 4 நாட்களில் ஏசி கிட்டங்கியிலிருந்து ஏறக்குறைய 1,90,000 மூட்டைகள், சுற்றுவட்டார ஏசி கிட்டங்கி யிலிருந்து 80,000 மூட்டைகள் சேர்ந்து 2,70,000 மூட்டைகள் வரத்தில் 2 லட்சம் மூட்டைகள் விற்பனை யாகியது.இதில் நடப்பு ஆண்டு டீலக்ஸ் ரகத்தில் 20-30 சதவீதம் மாத்திரமே விற்பனையாகிறது. காரணம் சில வியாபாரிகள் கணிப்புப்படி வரப் போகும் நாட்களில் டீலக்ஸ் ரகத்தில் மேலும் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சென்ற வாரம் குண்டூர் ஏசி கிட்டங்கியிலிருந்து தேஜா 11,000-13,800 ரூபாய்,

Updated On: August 18, 2025, 6:46 am
மஞ்சள் வாய்தாவில் மந்தம்

நிஜாம்பாத்:- சென்ற வாரம் மஞ்சள் உற்பத்திக் கேந்திரங்களில் கிராக்கி குறை வால் விலையில் 200-300 வரை குறைவு ஏற்பட்டது.என்.சி.டி .ஈ. எக்சில் சென்ற திங்களன்று ஆகஸ்ட் வாய்தா 12,982 ரூபாயில் ஆரம்பமான பிறகு வியாழன் வரை 368 குறைந்து 12,614, அக்டோபர் வாய்தா 2 ரூபாய் உயர்ந்து 13,350 ரூபாயில் முடிவு பெற்றது. நிஜாம்பாத்தில் சென்ற ஒரே வாரத்தில் 5-6 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் கொம்பு 11,200-13,200, பாலிஷ் கொம்பு 14,100- 14,200, கிழங்கு 10,500- 11,200, பாலிஷ் கிழங்கு 13,100-13,200, வாரங்கலில் கொம்பு 10,500 -11,000, கிழங்கு 10,400 -10,800, கேசமுத்திரத்தில் கொம்பு, கிழங்கு 10,000- 10,600, சதாசிவபேட், விகாராபாத், மரிப்பள்ளி பகுதியில்

Updated On: August 18, 2025, 6:44 am
சீரக செப்டம்பர் வாய்தாவில் மந்தம்

ஹைதராபாத் : - சென்ற வாரம் குஜராத் மாநிலம் 15,ஆகஸ்ட், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி போன்ற விடு முறை யால் மண்டி அடைப் பாக இருந்தது மேலும் விவசாயி களும் கரீப் பருவத்திற்காக மும்மரமாக இருப்பதால் மண்டியில் பலசரக்கு போன்றவை மிகவும் குறைவாக வந்தது. ஆனால் குஜராத் -ராஜஸ் தான் மாநில வியாபாரிகள் பருவ நிலையை பார்த்து சீரகம், மல்லி, ஓமம், சோம்பு போன்றவற்றை இருப்பு வைத்தவர்கள் தங்களது சரக்கை வெளியே கொண்டு வருகிறார்கள். என்.சி.டி.ஈ.எக்சில் சென்ற திங்களன்று சீரகம் ஆகஸ்ட் வாய்தா 18,900 ரூபாயில் ஆரம்பமான பிறகு வியாழன் வரை 25 குறைந்து 18,875, செப்டம்பர் வாய்தா 20 உயர்ந்து 19,020 ரூபாயில் முடிவுற்றது. குஜராத் மண்டியில் சரக்கு வரவில்லை.காரணம் கிருஷ்ண ஜெயந்தி சந்தர்ப்ப மாக விடுமுறையாக இருந்தது.

Updated On: August 18, 2025, 6:42 am
இறக்குமதி உளுந்து வலுவாக உள்ளது

ஹைதராபாத் :- மைசூர் வட்டாரங்களில் புதிய உளுந்து சென்னை டெலிவரி 7500-7600, ஆந்திர நந்தியாலில் புதிய பி.யூ-38 ரகம் 7450, மத்தியப்பிரதேச ஜபல்பூரில் க்ராவிட்டி க்ளீன் 7900, மகாராஷ்டிர அகமத்நகர் வட்டார புதிய உளுந்து 8000, பிரேசில் சரக்கு சென்னையில் ரெடியில் 8100 வரையும் வியாபாரமாகியது. வியாபாரிகளின் கணிப்புப்படி நாட்டின் அநேக பகுதியில் மழை பெய்வதால் அறுவடைக்காக தயாராக உள்ள பயிருக்கு நஷ்டமேற்படலாம் என்பதாலும், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் மூலம் விலையை உயர்த்தி கூறப்பட்டது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டில் விலை உயர்வது வலுவாக இருந்தது. சர்வதேச மார்க்கெட்டில் எஸ்.க்யூ விலை உயர்ந்து 865 டாலர், எப்.ஏ.க்யூ 790 டாலர் டன் வரை சி அண்டு எப் கூறப்பட்டது. இதனால் மும்பையில் எஸ்.ஏ.க்யூ 150 உயர்ந்து 7300, சென்னையில் எப்.ஏ.க்யூ ரெடியில் 7250, எஸ்.க்யூ 7700, டில்லியில் எப்.ஏ.க்யூ 7450, எஸ்.க்யூ 7950 ரூபாய் வரை விற்பனையாகியது. மத்திய வேளாண் மந்திராலய ரிப்போர்ட்படி கரீப்பருவத்திற்காக 08, ஆகஸ்ட் வரை நாட்டில் உளுந்து விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 19,91,000 ஆக இருந்தது 20,15 ,000 எக்டாரில் ஆகியது. மேலும் மாநிலத்தின் வேளாண் துறை கணிப்புப்படி குஜராத்தில் 11,ஆகஸ்ட் வரை விதைப்பு சென்ற ஆண்டு 81,072 ஆக இருந்தது 70,727, ராஜஸ்தானில் விதைப்பு சென்ற ஆண்டு 2,97,379 ஆக இருந்தது 3,12,786 ரூபாய் வரையும்,

Updated On: August 18, 2025, 6:40 am
கர்நாடகத்தில் பயறு வரத்து அதிகரிப்பு- விலை பலவீனம்

ஹைதராபாத் :- வேளாண் மந்திரிலய ரிப்போர்ட்டின்படி நடப்பு கரீப்பருவத்திற்காக 08,ஆகஸ்ட் வரை நாட்டில் பயறு விதைப்பு சென்ற ஆண்டின் இதே சமயம் 32,33,000 ஆக இருந்தது 33,31,000 எக்டாரில் நடைபெற்றது. மேலும் மோட் விதைப்பு சென்ற ஆண்டு 8,04,000 ஆக இருந்தது உயர்ந்து 9,06,000 எக்டாராகியது. மேலும் மாநிலத்தின் வேளாண் துறை கணிப்புப்படி குஜராத்தில் 11,ஆகஸ்ட் விரை பயறு விதைப்பு சென்ற ஆண்டு 51,344 ஆகஇருந்தது 46,121, ராஜஸ்தானில் 31,96,830 ஆக இருந்தது 23,51,729, மோட் 8,58,230 ஆக இருந்தது 9,04,269 வரையும், தெலங்கானாவில் 13,ஆகஸ்ட் வரை 63,222 ஆக இருந்தது 58,546 ஏக்கரில் நடைபெற்றது. கர்நாடகம், மகாராஷ்டிர உற்பத்திக்கேந்திரங்களில் கரீப்பருவ பயறு வரத்து உயர்ந்தும், மில்லர்ஸ் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்வதால் சென்றவாரம் விலையில் 50-100 ரூபாய் வரை குவின்டலுக்குக் குறைவு ஏற்பட்டது. கர்நாடக கல்பர்கா, சேடம் வட்டார புதிய மொகலாய் பயறு சென்னை டெலிவரி 7700, கண்ணாடிப்பயறு 90:10 ரகம் 9500, 80:20 ரகம் 9200 வரையும், கர்நாடக கல்பர்காவில் தினசரி 2500-3000 மூட்டைகள் வரத்தில் புதியது 6000-8500, பழைய ரகம் 3500-4500, யாதகிரியில் 4200-4300 மூட்டைகள் வரத்தில் 6311-9650, பாகல்கோட்டில் 8700-10,500 ரூபாய் வரை வியாபாமாகியது.மகாராஷ்டிர அகமத்நகரில் தினசரி 800-1000 மூட்டைகள் புதிய பயறு வரத்தில் 7000-9500, தூத்னியில் 100-150 மூட்டைகள் வரத்தில் 7000-7200, லாத்தூரில் 7000-7300, அகோலாவில் மில் ரகம் 6000-7450, கண்ணாடி 76000-8500 ரூபாயாகியது.

Updated On: August 18, 2025, 6:38 am
மக்காவுக்கான கிராக்கி குறைவு

ஹைதராபாத் :- கிராக்கி குறைவால் மக்கா விலையில் குறைவு ஏற்பட்டு வருகிறது. பீகார் மாநில குலாப் பாக் பகுதிக்கு தினசரி 180-200 லாரிகள் மக்கா வரத்தில் நயம் 2350-2400, நடுத்தரம் 2200-2250, அஸ்ஸாம் மாநில கர்பட்டியா வட்டாரங்களில் தினசரி 8-10 லாரிகள் வரத்தில் 2200-2350 விலையில் உள்ளூரில் சில்லரையில் வியாபாரமாகி மேற்கு வங்காளம், ஹரியாணா, பஞ்சாப் வட்டாரங்களுக்குச்செல்கிறது. உத்தரப்பிரதேச மாதவ்கன்ஜ், மைன்புரி, ஏட்டா, சீத்தாப்பூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வரத்து குறைந்து தினசரி 20-25 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் 1900-2100 வரையும், கர்நாடக கல்பர்கா, செலிக்கேரி, சித்ரதுர்க் வட்டாரங்களில் தினசரி 7-8 ஆயிரம் மூட்டைகள் மக்கா வரத்தில் 2400-2500 வரை வியாபாரமாகியது. ஆந்திர தெனாலி, குண்டூர் பகுதியில் தினசரி 35-40 லாரிகள் வரத்தில் உள்ளூரில் 2380-2400, நாமக்கல் டெலிவரி 2650-2700, விஜயநகரம், சாலூர், சீப்ருபள்ளி வட்டார உள்ளூர் மண்டியில் 10-12 லாரிகள் விற்பனை யானதில் உள்ளூரில் 2380-2400, அனப்பருத்தி, மண்டபோட்டா டெலிவர 2470-2480, தெலங்கானாவின் மேட்பள்ளி வட்டாரங்களில் தினசரி 7-8 லாரிகள் மக்கா வரத்தில் 2300-2350, அதிலாபாத்தில் 4-5 லாரிகள் வரத்தில் 2400 வரை விற்பனையாகியது.

Updated On: August 18, 2025, 6:36 am
அடுத்த மாதத்திலிருந்து குஜராத்தில் புதிய நிலக்கடலை

ஹைதராபாத் :- வியாபாரிகளின் கணிப்புப்படி நாட்டின் அநேக மாநிலங்களில் கன மழையால் மண்டியில் வரத்து எப்போதும் போல இருப்பதோடு பண்டிகைப்பருவத் திற்காக சப்ளையின் தேவையால் நிலக்கடலை விலையில் 100-150 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. குஜராத்தில் பருவ மழைக்கு முன்பு மழை பெய்ததால் நிலக்கடலை விதைப்பு நிலப்பரப்பில் பயிர் தயாராகி வருகிறது. ஒரு மாதத்திற்குப்பிறகு புதிய பருவம் ஆரம்பமாகிவிடும். ஆந்திர மாநில ராயலசீமா பகுதி கர்நூல், கடப்பா, அனந்தப்பூர் வட்டார அனைத்து மண்டியிலும் சேர்ந்து வாரத்திற்கு 70-80 ஆயிரம் மூட்டைகள், மத்தியப் பிரதேசத்தில் வாரத்திற்கு 10-12 ஆயிரம், குஜராத்தில் 8-10 ஆயிரம் மூட்டைகள் புதிய சரக்கு வரத்து நடைபெற்றது. ஆந்திர கர்நூல் ஜில்லாவில் வாரத்திற்கு ஏறக்குறைய 15-20, ஆதோனியில் 25-30, எம்மிக்கனூரில் 30-35, வேம்பள்ளி, டோன் வட்டாரங்களில் 10-15 ஆயிரம் மூட்டைகள் புதிய சரக்கு வரத்தில் 5000-7100, மடகசீரா, ஆதோனியில் எச்.பி.எஸ் நிலக்கடலை பருப்பு 80-90 கவுன்ட் 9700-9800, 70-80 கவுன்ட் மகாராஷ்டிரத்திற்காக 10,400-10,500, 60-70 கவுன்ட் மகாராஷ்டிரத்திற்காக 10,700-10,800, 60-65 கவுன்ட் 10,500-10,600, 50-60 கவுன்ட் 11,000-11,200, 90-100 கவுன்ட் 9500-9600, கல்யாணி 8100-8200 ரூபாய் வரை வியாபாரமாகியது. நந்திகோட்கூரில் எச்.பி.எஸ் நிலக்கடலைப்பருப்பு 140 -160 கவுன்ட் 7800, 90-100 கவுன்ட் 8800, 80-90 கவுன்ட் 8400, 70-80 கவுன்ட் 9800, 60-70 கவுன்ட் 10,400, 50-60 கவுன்ட் 10,900, கல்யாணி 100-120 கவுன்ட் 8000, கர்நாடக பெல்லாரி வட்டாரங்களில் வாரத் திற்கு 6-7 ஆயிரம் மூட்டைகள் புதியது வரத்தில் நடுத்தரம் 4500-6000, நயம் 6800-7200, செலிக்கேரியில் ஒரே வாரத்தில் 2-3 ஆயிரம் மூட்டைகள் நிலக்கடலை வரத்தில் 5000-7000 ரூபாய் வரை விற்பனையாகியது. எச்.பி.எஸ் நிலக்கடலைபருப்பு 90-100 கவுன்ட் 6200-6300, மற்றும் 80-90 கவுன்ட் 9500-9600, 70-80 கவுன்ட் 9800-9900, 60-70 கவுன்ட் 10,300-10,400, ஆந்திர வட்டாரச்சரக்கு 60-70 கவுன்ட் 10,500-10,600, 60-65 கவுன்ட் 10,700-10,800, 7080 கவுன்ட் 10,200-10,300 வரை ஆகியது. நரசராவ்பேட்டில் எச்.பி.எப் நிலக்கடலை பருப்பு 70-80 கவுன்ட் 10,600, 60=70 கவுன்ட் 11,100, 50-60 கவுன்ட் 11,600, ஹைதராபாத்தில் நிலக்கடலை பருப்பு ஆந்திர பகுதி 140-160 கவுன்ட் 8300, 80-90 கவுன்ட் 9700, 70-80 கவுன்ட் 10,000, 60-70 கவுன்ட் 10,300, 60-65 கவுன்ட் 10,600, 50-60 கவுன்ட் 10,900 ரூபாயாகியது. மேற்கு வங்காள கல்கத்தா வட்டாரங்களில் தினசரி 8-10 லாரிகள் வரத்தில் டேமேஜ் ரகம் 4000-4800 வரை நிலைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மைன்புரி, ஏட்டா, மாதவ் கன்ஜ் வட்டாரங்களில் தினசரி 15-20 ஆயிரம் மூட்டைகள் புதியது வரத்தில் நயம் ரகம் 5000-5400, நடுத்தரம் 4600-4800, நிலக்கடலை பருப்பு 60-70 கவுன்ட் 9400, தமிழ்நாடு டெலிவரி 8200 வரை வியாபாரமாகியது. பூனாவில் நிலக்கடலை பருப்பு குஜராத்தின் ஜாடா ரகம் 40-50 கவுன்ட் 8400, 35-40 கவுன்ட் 9000, ராஜஸ்தான் மாநில ஜாடா 60-70 கவுன்ட் தமிழ்நாட்டுக்காக 7900, 50 -60 கவுன்ட் 8400, 40-50 கவுன்ட் 8600, மும்பை ஜாவா ஆந்திர சரக்கு மும்பைக்காக 60-65 கவுன்ட் 10,400 -10,600, மகாராஷ்டிர ரகம் 9400-9500, உத்தரப்பிரதேசத் திற்காக 8800-9000 ரூபாயாகியது. குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் சுற்றுவட்டார மண்டியில் 18,ஆகஸ்ட் வரை மூடப்பட்டிருந்தது. நிலக்கடலை பருப்பு முந்தரா டெலிவரி போல்டு 60-70 கவுன்ட் 7900, 50-60 கவுன்ட் 8000, 50-55 கவுன்ட் 8100, 40-50 கவுன்ட் 8200, 38-42 கவுன்ட் 8600, கேசோதில் நிலக்கடலை பருப்பு போல்டு ரகம் 50-60 கவுன்ட் 8000, 60-70 கவுன்ட் 7850, 40-50 கவுன்ட் 8300, 38-42 கவுன்ட் 8700, திருவண்ணா மலையில் சிவப்பு ரக நிலக்கடலை 80-90 கவுன்ட் 11,600, வெள்ளை 70-80 கவுன்ட் 10,000 மற்றும் திண்டுக்கல் ரகம் கேரளத்திற்காக 80-90 கவுன்ட் நிலக்கடலை பருப்பு (80 கிலோ) 8400 வரை விற்பனையாகியது.

Updated On: August 18, 2025, 6:32 am
நிஜாம்பாத்தில் புதிதாக நிறுவப்பட்ட மஞ்சள் போர்டு அலுவலக திறப்பு விழா

நிஜாம்பாத்தில் புதிதாக நிறுவப்பட்ட மஞ்சள் போர்டு அலுவலக திறப்பு விழா நாட்டிலேயே பிரபலமான மஞ்சள் உற்பத்தி பகுதி தெலங்கானாவின் நிஜாம்பாத்தில் 29,ஜூன்,2025 ஞாயிறு அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் புதிதாக நிஜாம்பாத் மஞ்சள் போர்டு அலுவலகத்தை திறந்துவைத்தார். இது சந்தர்பமாக அநேக ரக மஞ்சள் வகைகளை பார்வைக்கு வைத் திருந்தார்கள். மற்றும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய், அர்விந்த், தனபால் சூரியநாராயண், மஞ்சள் போர்டு சேர்மன் பல்லே கங்காரெட்டி, பி.ஜே.பி தலைவர் கே.லக்ஷ்மன், கலெக்டர் கிருஷ்ணாரெட்டி, போலீஸ் அதிகாரி சாய் சைத்தன்யா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மேலும் ஜில்லா மந்திரி தனஸ்ரீ அனுசயா, தும்மல நாகேஷ்வர், நிஜாம்பாத் கிராம அதிகாரி பூபதி ரெட்டி, மாநில விதை அபிவிருத்தி தலைவர் அன்வேஷ் ரெட்டி, மற்றும் மானல மோகன் ரெட்டி, கலெக்டர் கிரண் குமார் அனைவரும் அமித் ஷா அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.

Updated On: June 29, 2025, 7:51 pm
மஞ்சள் விதைப்பு வேலை நடைபெற்று வருகிறது வாய்தாவில் விலை குறைவுஹைதராபாத் :- சென்றவாரம் உள்ளூர் மற்றும் ஏற்று

மஞ்சள் விதைப்பு வேலை நடைபெற்று வருகிறது வாய்தாவில் விலை குறைவுஹைதராபாத் :- சென்றவாரம் உள்ளூர் மற்றும் ஏற்று மதியாளர் களின் தேவை குறைவால் மஞ்சள் விலையில் 300-400 ரூபாய் வரை குறைவு ஏற்பட்டது. ஆனால் வரப்போகும் பண்டிகைப் பருவத்திற்கான தேவையை நோக்கும்போது மந்தமாவது நின்று விடலாம்.கிடைத்த செய்திகளின்படி நாட்டின் பிரபல மஞ்சள் உற்பத்தியாளர் மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒரிசா போன்ற மாநிலத்தில் நடவு வேலை துரிதமாக நடை பெற்று வருகிறது.சில மாநிலங்களில் ஏறக் குறைய 80 சதவீத வேலை பூர்த்தியாகிவிட்டது.

Updated On: June 29, 2025, 7:50 pm
மல்லி வாய்தாவில் திடம்

மல்லி வாய்தாவில் திடம் ஹைதராபாத் : - வியாபாரிகள் கணிப்புப்படி மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானில் நல்ல மழை வரத்தில் விவசாயிகள் விதைப்பு நிலத்தில் வேலையில் மும்மர மாக உள்ளது. இதனால் உற்பத்தியாளர் மண்டியில் வரத்து குறைவாக ஆனதோடு நாட்டின் பல சரக்கு வியாபாரி களின் சாதாரண தேவையால் மந்தமாவது நின்றுவிட்டது. காரணம் நடப்பு ஆண்டு குஜராத்தில் நிலக்கடலை விதைப்பு விரைவில் நடைபெற்றதால் பயிர் அறுவடை யோடு மல்லி விதைப்பும் ஆரம்பமாகலாம். குஜராத் மாநில இருப்பு வைப்பவர்கள் சென்ற ஆண்டு மீதி இருப்பை இதுவரை விற்பனை செய் கிறார்கள். என்.சி.டி.ஈ.எக்சில் சென்ற வாரம் திங்கன்று மல்லி ஜூலை வாய்தா 7020 ரூபாயில் ஆரம்பமான பிறகு வெள்ளி வரை 160 உயர்ந்து 7180, ஆகஸ்ட் வாய்தா 160 உயர்ந்து 7240 ரூபாயில் முடிவடைந்தது. ராம்கன்ஜ் மண்டியில் சென்ற வாரம் 8-10 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் பாதாம் 6600-6700, ஈகிள் 6900 -7000, ஸ்கூட்டர் 7200 -7300 வரை குவின்டலுக்கு உள்ளூரில் சில்லரையிலும், லாரி பில்டி தமிழ்நாடு வட்டாரங் களூக்காக லோடிங் கண்டிஷனில் 40 கிலோ மூட்டை பாதாம் 3450, ஈகிள் 3350 வரை விற்பனை யாகியது. மேலும் கோட்டா மண்டிக்கு வாரத்திற்கு 2500 மூட்டைகள் வரத்தில் பாதாம் 6500-6600, ஈகிள் 6800 -7000, பாரனில் 3000, சுற்றுவட்டார மண்டியில் சேர்ந்து 7-8 லாரிகள் வரத்தில் பாதாம் 6500-6600, ஈகிள் 6700-6800 வரை விற்பனையாகியது. குஜராத்தின் கோண்டலில் வாரத்திற்கு 20-23 ஆயிரம் மூட்டைகள் விற்பனையானதில் ஈகிள் 6600-6750, ஈகிள் ப்ளஸ் 6800-6850, நயம் 8000-8500, நடுத்தரம் 7000 ரூபாய்

Updated On: June 29, 2025, 7:48 pm